|
இளிவேனிலில் - இளவேனிற் பருவத்தில், எரிகதிர் இடபத்து - ஞாயிறு இடப விராசியிலிருக்கும்
வைகாசித் திங்களில், ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து - இருபத்தேழு
நாண் மீன்களில் பதின்மூன்று சென்றபின், இடைநிலை மீனத்து அகவையில் - நடுவணதாகிய
விசாக நாண்மீனின் அகத்தே, போதித்தலைவனொடு பொருந்தியபோழ்தத்து-புத்ததேவனுடன்
பொருந்திய பொழுதின் கண்ணே ;
தகை - தகுதியுமாம் ; ஒல்கா என்பது வலித்தல்
பெற்றது. அம் முனிவன் கூறியவாறே
என வருவித்து, பொருந்திய போழ்தத்துத் தோன்றினன் என முடிக்க. இருது - பருவம்
; பெரும் பொழுது. இளவேனில் - சித்திரையும் வைகாசியும். எரிகதிர் - ஞாயிறு.
எரிகதிர் இடபம் என்பதனை இடபஞாயிறு என வைகாசிக்குப் பெயராக்குதலுமாம் ;
என்னை? அவ்வாறு சிலையெழுத்துக்களில் வழங்குதலின் என்க. வைகாசித் திங்களில்
பதின்மூன்று பாகை சென்றபின் எனக்கொண்டு, இடைநிலை மீனம் என்பதனால் விசாகம்
கோடலுமாம் ; இப்பொருட்கு மீன்களுள்ளே இடைநிலைமீன் எனக்கொள்ளுதல் வேண்டும்
; பண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டமையின் விசாகம் நடுமீனாயிற்று ; அகவை
என்பதனால் விசாகத்தின் இரண்டு மூன்றாங் கால்கள் பெற்றாம். அத்து மூன்றும்
சாரியைகள். புத்ததேவன் தோன்றியதும், ஞானம் பெற்றதும் விசாகத்துடன் கூடிய
தூய நிறைமதி நாளாகலின் ஆபுத்திரன் பிறந்த அப் பொழுதினைப் போதித் தலைவனொடு
பொருந்திய போழ் தென்றார்.
27--35.மண்ணகம்
எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது - புவிமுழுதும்
மழை இல்லாம லிருந்தும் புண்ணியத் தூ நீர் மலருடன் பொழிந்தது, போதி மாதவன்
பூமியில் தோன்றும் காலம் அன்றியும்-புத்த தேவன் உலகின்கண் தோன்றும் காலமல்லாதிருந்தும்,
கண்டன சிறப்பு என - இத்தகைய சிறப்புக்கள் நிகழ்ந்தன என்று, சக்கரவாளக்
கோட்டம் வாழும்-சக்கரவாளக் கோட்டத்திலுறைகின்ற, மிக்க மாதவர் விரும்பினர்
வியந்து-மிக்க பெருந்தவமுடைய முனிவர்கள் ஆர்வமுடையராய் வியந்து, கந்துடை நெடுநிலைக்
கடவுள் எழுதிய அந்தில்பாவை அருளுமாயிடின் அறிகுவம் என்றே - உயரிய தூணின்கண்
கடவுளால் எழுதப்பட்ட பாவை உரைத்தருளுமாயின் அறிவோம் என்று, செறிஇருள் சேறலும்-செறிந்த
இருளின்கட் செல்லுதலும்;
மாரி
- மழை, முகில், போதொடு கூடிய நீர் சொரிந்ததென்க. சொரிதல் - பொழிதல்,
சோர்தல்; சொரியப்பட்டது என்றுமாம். கண்டன- |