|
காணப்பட்டன; 1"செயப்படு பொருளைச்
செய்தது போலத்'' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த
வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி ; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம்
சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க.
நெடுநிலையுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும்
என்றியைத்தலுமாம்.
36--9.மனிபல்லவத்திடை
மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவத்தின்கண் ஆருயிர் துறந்தோனாகிய ஆபுத்திரன்,
தணியா உயிர் உயச் சாவகத்து உதித்தனன் - குறையாத உயிர்கள் உய்யும்படி சாவக
நாட்டில் தோன்றினன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று - அவனது வரலாற்றினை
அறவண முனிவன் அறிவான் என்று கூறி, ஈங்கு என் நாவை வருத்தியது இதுகேள்-எனது
நாவை வருத்தியது இதனைக் கேட்பாயாக ;
தணியா
- குறையாத, நிறைந்த ; துன்பம் தணியாத உயிரென்றும் துன்பந் தணிந்து உயிருய்ய
வென்றும் உரைத்தலுமாம். பாவை என்று கூறி நாவை வருத்தியதென்க. பாவையின் கூற்றை
யுட்கொண்ட மாதவர்கள் தம்பால்வந்து வினாவத் தாம் அவர்கட்கு உரைத்தமை தோன்ற
என்நாவை வருத்திய தென்றார்; இதனால் அறவணவடிகள் தாபதப் பக்கத்து வாய்வாளாமையிற்
கருத்துடையரென்பதும் தோன்றும். ஆங்கு, ஈங்கு என்பன அசைகள்.
40--5.மண்ணாள்
வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும்
மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை
வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன்
அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன்
என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்துவர, அரைசு ஆள் செல்வம் அவன்பால்
உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன்
ஆயினன் அவன்தான். அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய மன்னவனாயினன்
;
மாதவன்
: முன்னிலையிற் படர்க்கை. அரைசு : இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை
; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத்தலுமாம்;
ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண்டென்பது பின்னர் அறியப்படும்.
நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது.
1
தொல். வினை. 49.
|