81--6.வடதிசை விஞ்ஞை மாநகர்த் தோன்றி - வடதிசையிலுள்ள பெரிய
வித்தியாதர நகரமாகிய காஞ்சன புரத்தில் உதித்து, தென்றிசைப் பொதியில்
ஓர் சிற்றியாற்று அடைகரை - தென்றிசையிலுள்ள பொதியின் மலையில் ஒரு சிற்றாற்று
அடைகரையில், மாதவன் தன்னால் வல்வினை உருப்பச் சாபம் பட்டு - தீவினை உருத்து
வந்தூட்ட முனிவர் ஒருவரால் சாபமடைந்து, தனித்துயர் உறூஉம்-ஒப்பற்ற துயரினைச்
செய்யும், வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் - அழியாத கொடிய பசியாகிய
வேட்கையுடன் சுழலும், காய சண்டிகை எனும் காரிகை தான்என்-காயசண்டிகை என்னும்
விஞ்சை மகள் என்க.
உருப்ப - அழல என்றுமாம். உறூஉம் - உறுவிக்கும்;
பிறவினை ; தன் வினையாகக் கொண்டு உறூஉம், திரிதரும் என்பவற்றைக் காரிகை
என்பதனுடன் தனித்தனி முடித்தலுமாம். வேட்கை-உணா வேட்கை. காயசண்டிகை யெனுங்
காரிகை நீ புகல் வேண்டும் என்றனள் என்க.
"மாதே,
கேளாய்; நல்லா எய்தி ஊட்டலும், முனிவன, ''ஒருவன் தோன்றும்; அவன் பொன்முட்டை
அகவையினான்'' என, நீத்தோன் ஒழியானாதலின், ஒருதானாகிப் போழ்தத்துத்
தோன்றினன்; நன்னீர் போதொடு சொரிந்தது; மாதவர் வியந்து அறிகுவமென்று
சேறலும், பாவை, ''அறவணன் அறியும்'' என்று என் நாவை வருத்திற்று; இது கேள்;
வேந்தன் வணங்கிப் பெற்றேனென்று வளர்ப்ப, உண்மையில் அவன் வேந்தனாயினன்;
அலத்தற்காலை ஆகியது; ஒழித்தல் தகாது" என மாதவன் உரைத்தலும், மணிமேகலை
தாயரொடு ஏத்திக் கடிஞையொடு கோலத்தோடு பெருந்தெரு வடைதலும், மாக்களும் விடரும்
தூர்த்தரும் பரிவெய்தி நோய்கூர, பூங்கொம்பு, பெருந்தக வுடைத்து'' என, அது கேட்டுக்
காரிகை ''நீ புகல் வேண்டும்'' என்றனள் என வினை முடிவு செய்க.
பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று.
|