[அங்ஙனங்
கூறிய விஞ்சைமகள் மணிமேகலையை நோக்கி, மீட்டும் ஆதிரையது கற்பின்
சிறப்பைக் கூறுவாள் : "இவள் கணவன் சாதுவனென்னும் பெயரினன்; அவன்
தீய நெறியிலொழுகிப் பொருளையிழந்து வறுமையுற்று, வேற்றுநாடு சென்று
பொருள் தேட வெண்ணிச் சில வணிகருடன் கப்பலேறிச் சென்றான்;
செல்லுகையில் கடுங்காற்றால் அக்கப்பல் கவிழ்ந்தது ; கவிழவே
சாதுவன் ஒடிந்த மரத்துண்டொன்றைப் புணையாகப் பற்றி நீந்திச்சென்று,
உடையின்றித் திரிவோராகிய நாகருடையமலைப்பக்கத்தை அடைந்தான்.
அவன் அவ்வாறிருக்க, அக் கப்பலினின்றுந் தப்பிக் காவிரிப்பூம்பட்டினம்
வந்தோர் ''கப்பல் உடைய இறந்தவர்களோடு சாதுவனு மிறந்தான்'' என்று
ஆதிரைக்குக் கூறினர்; அது கேட்டலும் அவள் தானும் இறக்கத் துணிந்து,
சுடலைக் கானிற் குழிதோண்டி அதில் விறகினை யடுக்கித் தீயினை
மூட்டி, ''வினைப்பயனால் என் கணவனடைந்த இடத்தை யானும் அடைவேனாக''
என்று சொல்லி அதிற் புகுந்தாள் ; புகுந்தவளை அத்தீயானது சுடா தொழிந்தது
; அவள் உடுத்த கூறையும் சூடிய மாலையும் பழைய நிறம் மாறாமல் விளங்கின.
அவள் ''தீயுஞ் சுடாத பாவியேன் இனி யாது செய்வேன்'' என்று ஏங்குகையில்,
வான் மொழியானது ''ஆதிரை ! உன் கணவன் மரிக்கவில்லை ; அவன்
பிழைத்துச்சென்று இப்பொழுது நாகர்மலையில் இருக்கின்றான் ; அங்கே
பல ஆண்டு தங்கான் ; சந்திரதத்தனென்னும் வாணிகனது வங்கத்திலேறி
வந்து உன்னை யடைவான் நீ வருந்தாதே'' என்று கூறிற்று. அது கேட்ட
ஆதிரை வருத்த மொழிந்து வீட்டினையடைந்து, கணவன் விரைந்து வருதல்
கருதி இடையறாது அறங்கள் செய்துகொண்டிருந்தாள்.
"அங்கே நாகர்மலையை
யடைந்த சாதுவன் ஒரு மரநிழலைச்சார்ந்து அயர்ந்து துயில்கொள்ள
ஆண்டுள்ள நாகர்கள் வந்து பார்த்து, இவ்வுடம்பு நமக்கு நல்ல உணவாகுமென்றெண்ணி
அவனை யெழுப்பினர். அவன் அன்னோர் மொழியை நன்கு கற்றவனாதலின்
அம் மொழியாலே பேச, அவர்கள் அவனை வருத்துதல் தவிர்த்து, ''ஈங்கு
எங்களாசிரியன் இருக்கின்றனன்; நீ அவனிடம் வரல் வேண்டும்'' என்று
அழைத்துச் சென்றனர். சாதுவன் அவர்களோடும் போய், கள்ளும் புலாலும்
மிடைந்துள்ள இருக்கையில் ஆண்கரடி பெண்கரடியோ டிருப்பது போலப்
பெண்ணுடனிருந்த அவர்கள் குருமகனைக் கண்டு, அவனோடு அளவளாவி அவனை
வயமாக்கிக்கொண்டான் ; கொள்ளவே, அக் குரு மகன் ''நீ இங்கு வந்தது
எதன் பொருட்டு?'' என்ன, சாதுவன் நிகழ்ந்ததைக் கூறினன். அவன்,
''பசியால் வருந்திய இந் நம்பிக்கு வேண்டியவளவு கள்ளையும் ஊனையுங்
கொடுத்துப் பின் இளையளாகிய நங்கையொருத்தியையும் கொடுமின்''
என்றுரைத்தான். சாதுவன் அது
|