பக்கம் எண் :208 |
|
::TVU::
16.
ஆதிரை பிச்சையிட்ட காதை
|
கேட்டு அவனுடைய அறியாமைக்கு வருந்தி, ''எனக்கு அவை வேண்டா'' என்றனன்.
அவன், ''பெண்டிரும் உண்டியுமன்றி மாந்தர்க்கு இன்பந் தருவது வேறே
யாதுளது? இருந்தாற் சொல்வாய்'' என்று சினந்துரைக்க, சாதுவன், உடம்பிற்கு
வேறாக உயிருண்டென்பதையும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் உளவென்பதையும்
அறிவுறுத்தி, அவனுக்கேற்றவாறு அறத்தினைப் போதித்து விடைபெற்று,
அவன் அளித்த சந்தனம் அகில்துகில் முதலியவற்றைக் கைக்கொண்டு,
அங்குவந்த சந்திரதத்தனது வங்கத்திலேறி இந்நகரை யடைந்து இவளோடு
வாழ்வானாகிப் பல அறங்களுஞ் செய்தான். அத்தகைய மேம்பாடுடைய
இந்த ஆதிரையின் கையால் முதலிற் பிச்சை பெறுக" என்று சொல்ல,
மணிமேகலை அவளது மனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப்பாவைபோல்
நின்றாள்; நின்றவுடன், ஆதிரை தொழுது வலங்கொண்டு, அமுதசுரபியின்
உள்ளிடம் நிறைய, ''பாரக மடங்கலும் பசிப்பிணி யறுக'' எனக் கூறி
ஆருயிர் மருந்தாகிய அன்னத்தையிட்டனள்.]
|
5
10
15
20
|
ஈங்கிவள் செய்தி கேளென விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவிலன் ஆகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக
கணிகை யொருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின்
பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக்
காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்
வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானுஞ் செல்வுழி
நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ
ஒடிமரம் பற்றி ஊர்திரை யுதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நன்மரம் பற்றிப்
போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர்
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்
சாதுவன் தானும் சாவுற் றானென |
|
|
|