பக்கம் எண் :

பக்கம் எண் :209

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை




25





30





35





40





45





50





55
ஆதிரை நல்லாள ஆங்கது தான்கேட்டு
ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்
தாரீ ரோவெச் சாற்றினள் கழறிச்
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து

முடலை விறகின் முளியெரி பொத்தி
மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன் என்றவன் புகுதலும்
படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொன்னிறம் வழாது
விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த
திருவின் செய்யோள் போன்றினி திருப்பத்
தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்

யாது செய்கேன் என்றவள் ஏங்கலும்
ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை
ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன்

சந்திர தத்தன் எனுமோர் வாணிகன்
வங்கந் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென
அந்தரந் தோன்றி அசரீரி அறைதலும்
ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்

பொய்கைபுக் காடிப் போதுவாள் போன்று
மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென்
கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப்
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்
அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்

விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல்
மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து
துஞ்சுதுயில் கொள்ளஅச் சூர்மலை வாழும்