முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :210
::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
60
65
70
75
80
85
நக்க சாரணர் நயமிலர் தோன்றிப்
பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும்
மற்றவர் பாடை மயக்கறு மரபிற்
கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்
சுற்று நீங்கித் தொழுதுரை யாடி
ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்
ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீயென அவருடன் போகிக்
கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்
எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப்
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்
பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக்
கோடுயர் மரநிழற் குளிர்ந்த பின்னவன்
ஈங்குநீ வந்த காரணம் என்னென
ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில்
காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத்
தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும்
மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்