பக்கம் எண் :

பக்கம் எண் :211

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

90





95





100





105





110





115





120


உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

கண்டனை யாகெனக் கடுநகை எய்தி
உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர்
இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை
செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்

உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில்
தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின்
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ
போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது

யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்
கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ

என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும்
நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு
உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கொழி மரபின் சாவுறு காறும்

எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும்
நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை
உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன்
உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின்
அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி

மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன்
ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம்
ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப்
பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை

உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை
விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ
டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து