என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க
பொருள். கெட்ட பொருள் - தீயபொருளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும்
: உம்; உடனிகழ்ச்சி.
|
11--16. வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன்
பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாதுவனும் செல்கின்ற
விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில்
காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப
- கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு
ஊர்கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை
யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன்
;
|
தங்கா வேட்கை
- ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற்
செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம்.
உதைத்தல் - உந்தல் ; 1"ஓடுந்
திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற
வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லாமற் சஞ்சரிப்பவராகலின்
நாகர், ''நக்க சாரணர்'' எனப்பட்டார். நாகர்-நாக இலச்சினையுடைமையால்
அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க.
|
17--21.நாவாய் கேடுற நன்மரம்
பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம்
அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப்
போந்தவர்கள், இடையிருள் யாமத்து ஏறிதிரைப் பெருங்கடல் - மிக்க
இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில்,
உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு
ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும்
இறந்தனன் என்று கூற ;
|
சாதுவன் மரத்தைப் பற்றிப்
போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர்
உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு
வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு.
|
22--28. ஆதிரை
நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ
ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே
ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி,
சுடலைக் கானில் |