பக்கம் எண் :

பக்கம் எண் :215

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

அசரீரி - சரீரம் இல்லாதது ; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும் ஆகாயவாணி எனவும் கூறுவர்.
45--51.   ஐ அரி உண்கண் அழுதுயர் நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள் தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல, மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட் சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள் மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம் புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள் ;

முட்டுதல் - குன்றுதல், வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர் தொழுமெனப் பிரித்துக்கூட்டுக ; வியப்பு-மேன்மை யெனலுமாம்.
 
52--59.   ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன் கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில், மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள - முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி - அச்சத்தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து, பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன் வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன், ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும் ;
அலைநீர் - கடல். துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரணராகிய நாகர் என்க. நயமிலர் - இனிமையில்லாதவர் ; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க வருத்தம்; 1''பக்க நீங்குமின் பரிபுலம் பினரென'', என்பது காண்க.
60--71.   மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின்-அந்நாகருடைய மொழியைச் சாதுவன் ஐயமறக் கற்றவனாகலின்

1 சிலப். 10 : 266.