வெங்கள் : வெம்மை
- விருப்பம்; வெவ்விய கள்ளுமாம். கொடும்: செய்யுமென்னும் வாய்பாட்டு
ஏவல். அயர்ந்து-கவலையுற்று என்றுமாம்.
|
80--83. பெண்டிரும் உண்டியும் இன்றெனில்
மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் - மாதரும் உணவும் இல்லையானால்
மக்கட்கு உலகத்தில் அடையக்கூடிய பயன் உண்டோ, உண்டெனில் காண்குவம்
யாங்களும் காட்டுவாயாக என - அங்ஙன முண்டென்றால் அதனை யாங்களும்
காண்போம் காட்டுவாயாக என்று, தூண்டிய சினத்தினன் சொல் என -
மிக்க சீற்றமுடையனாய்க் கூறுக என, சொல்லும் - சாதுவனுரைக்கும்
;
|
இன்று என்பது பொதுவினையாய்
நின்றது. உறுபயன்-இன்பம். தூண்டிய சினத்தினன் காட்டுவாயாக சொல்க
என்று சொல்ல வென்க. சொல்லென என்பதிலுள்ள என என்பது சொல்ல
என்னுந் துணையாய் நின்றது.
|
84--91. மயக்கும்
கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற
உயிர்களைக் கொல்லுதலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற
அறிவினையுடையோர் விலக்கினர், கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர்
சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள் இறத்தலும்
இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர்
நல்லுலகு அடைதலும்-நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய
மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
- தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும்
நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
- உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை
யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க ;
|
கோறல் - கொன்றுண்டல்
என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு.
சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் 1"உறங்குவது
போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை
வாழ்த்தானும் அறியப்படும். சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலுமென
நிரனிறை.அல்லறம்-அறமல்லது; பாவம்.
|
11--5. கடு நகை எய்தி - நாகா குரவன் பெருஞ்
சிரிப்புடையனாய், உடம்புவிட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம்
புகும் என்றே
|
குறள். 339.