கண் பலரும் வந்து புகுதற்காகவே எப்பொழுதும் வாயிற் கதவு திறந்துள்ள
உலகவறவி யென்னும் அம்பலம் ஒன்றுண்டு ;
|
|
''''ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர்.
ஆரு மின்மையி னரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்.
|
ஆதலின் அவ்விடத்திற்குச்
செல்வாயாக'''' என்று கூறிவிட்டு, அவள் தன்னூருக்குச் சென்றனள். பின்
மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச் சென்று உலக வறவியை
அடைந்து மும்முறை வலம்வந்து பணிந்து, அதிலேறிச் சம்பாபதியையும்
கந்திற்பாவையையும் வணங்கி, வெயிலாற் கரிந்த காட்டிலே மழை தோன்றினாற்போலப்
பசியால் வருந்திய மக்கட்கு அமுதசுரபியோடு தோன்றி, ''''இஃது ஆபுத்திரன்
கையிலிருந்த அமுதசுரபியாகும் ; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும் வருக''''
என்று கூற, பலரும் வந்து உண்பாராயினர் ; ஆதலின் அவ் வம்பலத்தில்
உண்ணு மொலி மிகுந்தது.] |
5
10
15
20
|
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல
வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத்
தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி
யானைத் தீநோய் அகவயிற் றடங்கிய
காயசண் டிகையெனுங் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு
இட்ட தாற்றாக கட்டழற் கடும்பசிப்
பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால்
அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி
துன்னிய என்னோய் துடைப்பா யென்றலும்
எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம்
பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்
மாசில் வாளொளி வடதிசைச் சேடிக்
காசில்காஞ் சனபுரக் கடிநக ருள்ளேன்
|