பக்கம் எண் :223 |
|
::TVU::
25
30
35
40
45
50
55
|
விஞ்சையன் றன்னொடென் வெவ்வினை உருப்பத்
தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவர லருவிக் கடும்புனல் கொழித்த
இடுமணற் கானியாற் றியைந்தொருங் கிருந்தேன்
புரிநூன் மார்பில் திரிபுரி வார்சடை
மரவுரி யுடையன் விருச்சிகன் என்போன்
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனையதோர்
இருங்கனி நாவற் பழமொன் றேந்தித்
தேக்கிலை வைத்துச் சேணாறு பரப்பிற்
பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன்
சீர்திகழ் நாவலில் திப்பிய மானது
ஈரா றாண்டில் ஒருகனி தருவது
அக்கனி யுண்டோர் ஆறீ ராண்டு
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்
பன்னீ ராண்டில் ஒருநா ளல்லது
உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்
அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து
முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு
உண்ணு நாளுன்உறுபசி களைகென
அந்நா ளாங்கவன இட்ட சாபம்
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை
வாடுபசி உழந்து மாமுனி போயபின்
பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென்
அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற
இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி
ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன்
ஊனுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
|
|
|
|