பக்கம் எண் :224 |
|
::TVU::
60
65
70
75
80
85
90
|
வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத்
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக
நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி
ஆங்கவன் ஆங்கெனக் கருளொடு முரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்
பலநா ளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுகென் றவனருள் செய்ய
இப்பதிப் புகுந்தீங் கியானுறை கின்றேன்
இந்திர கோடணை விழவணி வருநாள்
வந்து தோன்றியிம் மாநகர் மருங்கே
என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்
பின்வரும் யாண்டவன் எண்ணினன் கழியும்
தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமே கலையென் வான்பதிப் படர்கேன்
துக்கந் துடைக்குந் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவி ஒன்றுண் டதனிடை
ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்
வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென்
றாங்கவள் போகிய பின்னர் ஆயிழை
ஓங்கிய விதியின் ஒருபுடை ஒதுங்கி
வலமுறை மும்முறை வந்தனை செய்தவ்
உலக வறவியின் ஒருதனி யேறிப்
பதியோர் தம்மொடு பலர்தொழு தேத்து
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய
தந்துணைப் பாவையைத் தான்தொழு தேத்தி
|
|
|
|