1--6. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
- கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற,
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய
சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல -
அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு
கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு
மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக்
கண்டு ;
பாத்து - பகுத்து
என்பதன் மரூஉ. பாத்தூண் - இயல்புடைய மூவர்க்கும் தென்புலத்தார்
முதலிய நால்வர்க்கும் பகுத்துண்டற்குரிய உணவு ; இதனால் ஆதிரையளித்த
உணவின் தகுதியும், ஆதிரையின் மனையற மாண்பும் பெறப்பட்டன ; 1''''பழியஞ்சிப்
பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்''''
என்பது அறியற் பாலது. ஆதிரைபாற் பெற்றதற்கு அறத்தின் ஈட்டியதும்,
மணிமேகலை கருதியவாறு மன்னுயிர்க்களிக்க அது பயன்படுதற்கு அறவோன்
திறத்து வழிப்படுதலும், உவமையாயின. இனி, அறவோன் என்பதற்குச்
சற்பாத்திரம் என்றும், திறத்து வழிப்படும் என்பதற்குப் பெறுவோர்
பெருமைக்குத் தக்கபடி பெருகுமென்றும் கருத்துக்கொண்டனர் மகாமகோபாத்தியாய
டாக்டர் சாமிநாதையர் ; ஈண்டு அது பொருந்துமேற் கொள்க. பிற
உயிர்கட்கும் அளிக்கப்படினும் சோறுண்டலை இயல்பாக வுடையர் மக்களாதலின்,
''வாங்குகை வருந்த'' என்றார். இக் கருத்து முன்னரும் வந்துள்ளமை காண்க.
7--16. யானைத் தீ நோய் அகவயிற்று
அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும்
பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும்
மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி