சென்று சம்பாபதியை வணங்கி "பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின்
கையிற் கொடுத்துவிட்டு ஒளித்துச் சென்ற மணிமேகலையை இங்குள்ள
பாவைகளுள்ளே யான் எவ்வாறுணர்வேன்; நீ அவளை எனக்குக் காட்டாயாயின்
பன்னாளாயினும் நான் இவ்விடத்திலேயே பாடு கிடப்பேன்; மணிமேகலையை
இங்கே விடுத்து நான்மட்டும் போகேன்; உன் திருவடியைத் தொட்டேன்"
என்று சூளுரைத்தான்.]