முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :234
::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
30
35
40
45
50
55
60
பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி
மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப்
பொற்றேர்க் கொண்டு போதே னாகில்
சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையே னாகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபின னென்றே
வஞ்சினஞ் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறிவளை நல்லார் சிலர்புறஞ் சூழக்
குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள்
கடுந்தேர் வீதி காலிற் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்
தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறைப்
பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்
திகழொளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத்
துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி
வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை
கொண்டிரு மருங்குங் கோதையர் வீச
இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப்
திருந்தெயி றிலங்கச் செவ்வியி னக்கவன்
மாதவி மணிமே கலையுடன் எய்திய
தாபதக் கோலந் தவறின் றோவென
அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப
ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
நாடகம் விரும்ப நன்னலங் கவினிக்
காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய
விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்
பாழ்மம் பறந்தலை அம்பலத் தாயது
வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்