பக்கம் எண் :

பக்கம் எண் :235

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை


65





70





75





80





85





90





95
ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன்
வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன்

மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது
ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க்
காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ
ஏந்திள வனமுலை இறைநெரித் ததூஉம்
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த

முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம்
அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பிய தூஉம்
மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக்
காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண்

அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச்
செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென்
உளங்கொண் டொளித்தாள் உயிர்க்காப் பிட்டென்று
இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப்

பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த
அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள்
தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ
எய்யா மையலேன் யானென் றவன்சொலச்

சித்திரா பதிதான் சிறுநகை எய்தி
அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில்
காமக் கள்ளாட் டிடைமயக் குற்றன
தேவர்க் காயினுஞ் சிலவோ செப்பின்
மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி

ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும்
மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து
அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய
பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த்

தங்கா வேங்கை தனையவள் தணித்ததூஉம்
கேட்டு மறிதியோ வாட்டிறற் குரிசில்
கன்னிக் காவலுங் கடியிற் காவலும்