பக்கம் எண் :

பக்கம் எண் :236

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை


100





105





110





115





120





125





130
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்

செருக்கயல் நெருங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்

கோன்முறை யன்றோ குமரற் கென்றலும்
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து
விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி
ஆயிழை யிருந்த அம்பல மெய்திக்
காடமர் செல்வி கடிப்பசி களைய

ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத்
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்
இடங்கழி காமமொ டடங்கா னாகி
உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென்

நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நோசிதவந் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத்
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பெனச் சென்று

நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என்னமர் காதல னிராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தவ்
நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக்