பக்கம் எண் :

பக்கம் எண் :237

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை


135





140





145





150





155





160





165
கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில்
தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில்

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப்

பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ
கேட்டனை யாயின் வேட்டது செய்கென
வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு

ஆடவர் செய்தி அறிகுநகர் யாரெனத்
தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய்
மணிமே கலைதான் வந்து தோன்ற

அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த
காயசண் டிகைதன் கையிற் காட்டி
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை

ஈங்கிம மண்ணீட் டியாரென உணர்கேன்
ஆங்கவள் இவளென் றருளா யாயிடின்
பன்னா ளாயிரனும் பாடு கிடப்பேன்
இன்னுங் கேளாய் இமையோர் பாவாய்
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்

அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்
முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும்
குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக்
கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக்
கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி

வல்வா யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென