பக்கம் எண் :

பக்கம் எண் :240

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

  கையகப்படுத்து, ஆங்கவள் ஏந்திய கடிஞையை - அவள்
கையில் ஏந்திய ஓட்டினை, பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி -
ஏற்றுண்போராகிய பிற மக்களின் கையிலே காட்டி, மற்றவன்
தன்னால் - அவ்வுதயகுமரனால், மணிமேகலைதனைப் பொற்றேர்க்
கொண்டுபோதேன் ஆகில் - அவளைப் பொற்றேரின்மீது ஏற்றிக்
கொண்டு வாரேனாயின்

போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய என்பதற்குப் பூக்கும் பருவத்தில் அதனை யடைதற்கு விரும்பிய என்றுரைத்தலுமாம். இக்காதை
யுட் பின்னரும் உதயகுமரன் வண்டாக உருவகிக்கப்படுகின்றனன். தலைவன் மகளிர் நலத்தை யுண்டு துறத்தற்கு வண்டினை உவமை கூறுதலுமுண்டு; 1 "பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும், வண்டிற் றுறப்பான் மலை" என்பது காண்க. பிறர் கைக்காட்டி - பிறரிடம் பறித்துக் கொடுத்தென்றபடி.
 
33--42. சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி - செங்கற்களைத் தலை மீதேற்றி அரங்கினைச் சுற்றி வந்து, வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோ ரனையேன் ஆகி - குற்றத்துடன் கூடிவாழும் மகளிரைப் போன்றவளாகி, அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினன் என்றே-அரங்கின்கண் ஆடுகின்றநாடக மகளிருடைய இல்லத்தின் கண் நுழையாத முறைமையளாவேன் என்று, வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை உயிர்த்து-வஞ்சினங்கூறி நெஞ்சு புகையெழப் பெருமூச் செறிந்து, வஞ்சக்கிளவி மாண்பொடு தேர்ந்து - வஞ்சம் பொருந்திய சொல்லை நன்கு ஆராய்ந்து, செறிவளை நல்லார் சிலர் புறம் சூழ் - நெருங்கிய வளையல்களை யணிந்த பொது மகளிர் சிலர் புறத்தே சூழ, குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் - சிறு வியர்வைநீர் அரும்பிய அழகு பொருந்திய ஒள்ளிய முகத்தையுடையளாய், கடுந்தேர் வீதி காலிற்போகி - விரைந்த செலவினையுடைய தேர்கள் செல்லும் வீதியில் நடந்து சென்று, இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி - அரசிளங் குமரன் இருப்பிடத்தை அடைந்து ;

ஏற்றி - ஏற்றப்பட்டு என்றுமாம். பதியிலாரிற் குடிக்குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி அரங்கு சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபாகலின், சித்திராபதி இங்ஙனம் வஞ்சினஞ் சாற்றினளென்க ; ''ய ங்குஞ் சூழ்போகி'' எனப் பாடங் கொண்டு, ஊரைச் சுற்றி வந்து என்றுரைத்தலுமாம்; 2 "சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்பதும் அதன் உரைகளும் காண்க. மடந்தையர் தம்மோர் ; ஓர் : அசை. மரபினன் : அன்விகுதி, தன்மைக்கண் வந்தது ; ''மரபினளன்றென'' என்பதும் பாடம் வஞ்சக்கிளவி - மணிமேகலையை உதயகுமரன் வயமாக்கற்கேற்ற சொல். கோலமுகத்து வியர்பொடித்தவளாய் எனப் பிரித்துக் கூட்டுதலுமாம்.


1 கலி. 40 : 24--5. 2 சிலப். 14 : 146.