பக்கம் எண் :

பக்கம் எண் :242

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

 

நறிய மலர் விரியப் பெற்றது; உதயகுமரன் எனும் ஒரு
வண்டு உணீஇய - அதனை உதயகுமரனாகிய ஒப்பற்ற வண்டு உண்
ணும் பொருட்டு, விரைவொடு வந்தேன்-விரைந்து வந்தேன்
;வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்தாயது - அது
மிக்க பெருமையையுடைய இம் மூதூரின் கண்ணே பாழிடமாகிய
புறங்காட்டைச் சார்ந்த உலக வறவியில் உள்ளது ; வாழ்க நின்
கண்ணி வாய்வாள் வேந்து என-கூரிய வாய் பொருந்திய வாளினை
யுடைய மன்னவ நின் கண்ணி வாழ்வதாக என வுரைப்ப ;

 
உதயகுமரன் அவைக் களத்திருந்தா னாகலின் சித்திராபதி தான் கூறுவதனைக் குறிப்பி னுணர்ந்துகொள்ளுமாறு சிலேடையாற் கூறுவாளாயினள். காஞ்சிமரத்தைப் புனைந்துரைப்பது போன்ற இதன்கண், ''குருகு'' என்பது மாதவியையும், ''மணிக்காஞ்சி'' என்பது மணிமேகலையையும் குறித்து நின்றன. மாதவிபெற ஓங்கிய மணிமேகலை நாடகம் விரும்பப் பருவ மெய்தினளென்க. குருகு-குருக்கத்தி ; இது மாதவியெனவும் படும். காஞ்சி - மேகலையாதலைத் திவாகரம் முதலியவற்றானறிக, நாடகம் - நாட்டினிடம், நாடகக்கலை. நாடகம் இவளாற் சிறப்பெய்து மாகலின் "நாடகம் விரும்ப" என்றார் ; 1 "நாடக மேத்து நாடகக் கணிகை" என வருதல் காண்க. நலம் கவினி - நலம் நிறைந்து என்னும் பொருட்டு. காமர்-விருப்பம். ''உதயகுமரனெனு மொருவண்டு'' என்றது முன்னிலைப் புறமொழி. பறந்தலை - புறங்காடு. குருகு கருவுயிர்ப்ப ஓங்கிய காஞ்சி, நலங் கவினிக் கடிமல ரவிழ்ந்தது ; அதனை உதயகுமரனாகிய வண்டு உண்ணும் பொருட்டு வந்தேன் ; அக் காஞ்சி அம்பலத்தாயது என்க. கண்ணி-தலையிற் சூடும் மாலை. நின் கண்ணி வாழ்க வென்றல் மரபு.

 
64--65. ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென - பெரிய கடலிலே கப்பல் உடையப்பட்டவன் சிறந்த தெப்பத்தைப் பெற்றாற்போலக் கருதி, மற்று அவட்கு உரைப்போன்- சித்திராபதிக்குக் கூறுபவனாய்.
 
 
உடைகலப் பட்டோன் - கலம் உடையப் பட்டோன் என மாறுக. "உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்" (16:20) என முன் வந்தமையுங் காண்க.

 
66--73. மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி யென்று ஒழிவேன் முன்னர்-பளிக்கறையின்கண் பொருந்திய புதுமையினை யுடைய பாவையாகிய இது சித்திரச் செய்கை என்று நீங்குவேன் முன்னே, காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்து இளவனமுலை இறைநெரித்ததூஉம் - காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் பிணித்த பிணிப்பு விடாவாய் ஏந்திய இளைய அழகிய முலையை இறையளவு நெரித்த செய்கையும், ஒத்தொளிர் .  


1
சிலப். பதி. 15.