|
பவளத்து உள் ஒளி சிறந்த - பவளத்தை யொத்து
ஒளிரு
கின்ற வாயினுள்ளே ஒளிமிக்க, முத்துக் கூர்த்தன்ன
முள்எயிற்று
அமுதம் - முத்துக்கள் கூர்மையுற்றாலன்ன கூரிய
பற்களின்கண்
ஊறுகின்ற அமுதினை, அருந்த ஏமாந்த ஆருயிர்
தளிர்ப்ப-அருந்து
தற்கு ஆசைப்பட்ட அரிய உயிரானது தளிர்க்குமாறு,
விருந்தின்
மூரல் அரும்பியதூஉம் - புதிய புன்முறுவல் பூத்ததுவும்
;
|
முன்பு மணிமேகலை தன்னைக் கண்டு அஞ்சிப் பளிக்கறையிற்
புகுந்த பொழுது அவளை ஓவியமென்று தான் எண்ணியிருந்தானாக உதயகுமரன்
கூறினானென்க. விடா அஃஎதிர்மறை வினையெச்சமுற்று. இறை - சிறிது.
அருந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது ; "அருந்தே மாந்த
வாருயிர் முதல்வனை" (14 : 68) என முன்னரும் இங்ஙனம் போந்தது.
|
74--80. மாயிதழ்க் குவளை மலர் புறத்து
ஓட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் - கரிய இதழ்களையுடைய
குவளை மலர்களைப் புறத்தே ஓடச்செய்து காய்கின்ற வேலினை வென்ற
கரிய கயல்மீனைப் போன்ற நீண்ட கண்கள், அறிவு பிறிதாகியது ஆயிழை
தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் - மணிமேகலைக்கு
அறிவு வேறுபட்டதென்று அறிவிக்குமாறு காதினிடம் ஓடிச் சென்ற அழகும்,
பளிங்கு புறத்தெறிந்த பவளப்பாவை என் உளம் கொண்டு ஒளித்தாள்
உயிர்க் காப்பிட்டு என்று-ஆகிய இவற்றைக்கொண்டு பளிக்கறையின்
புறத்தே தோன்றிய பவளப்பாவை உயிரைக் காத்தல் செய்து என் உளத்தில்
ஒளித்தாள் என்று, இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்-இருளையுடைய
இடையாமத்தில் துயிலாதிருந்தேன் முன்பு ;
|
ஓட்டி வென்ற கண்,
கயல் நெடுங்கண் என்க. செவியில்உ,ரைக்கப் புக்கதுபோற் சென்ற
வென்க. கண்ணின் இயல்பாகிய நீட்சியையோ அல்லது மீட்சியையோ
இங்ஙனங் கற்பித்துக் கூறுதலால் இதுதற்குறிப்பேற்றம். கொண்டு -
நெரித்ததூஉம் அரும்பியதூஉம் செவ்வியுமாகிய இவற்றைக் கொண்டு,
பாவை கொண்டு உயிர்க்காப்பிட்டு என் உளத்து ஒளித்தாள் என்க.
இருந்தேன் முன்னர் - துயிலாதிருந்தேனுடைய முன்பு; "பொங்கு மெல்லமளியிற்
பொருந்தா திருந்தோன், முன்னர்த் தோன்றி" (7: 6-7) என முன்பு
வந்திருத்தல் காண்க. இருந்தேன் ; அங்ஙனமிருந்த என் முன்னர் என
வேற்றுத்துரைக்க.
|
81--85. பொன்திகழ்
மேனி ஒருத்தி தோன்றி - பொன்போல விளங்குகின்ற திருமேனியையுடையஒருத்திதோன்றி,
செங்கோல் காட்டி - செங்கோன்மையை அறிவுறுத்தி, செய்தவம் புரிந்த
அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் - தவநெறியிற் செல்லும்
மணிமேகலையின்மீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்று கூறினள்,
தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ .
|