பக்கம் எண் :

பக்கம் எண் :244

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

  எய்யா மையலேன் யான் என்று அவன் சொல-அங்ஙனங் கூறி
யது ஒரு தெய்வந்தானோ அன்றி வானவர் உலகில் தோன்றிய
வேறு பொருளோ இன்னதென அறியாத மயக்கமுடையேன்
என்று உதயகுமரன் கூற ;

ஒருத்தி என்றது மணிமேகலா தெய்வத்தை- எய்யாமை - அறியாமை : உரிச்சொல், திப்பியங் கொல்லோ - வியப்பினை விளைவிக்கும் வேறொன்றோ என்றுமாம்.

86--89.  சித்திராபதி தான் சிறு நகை எய்தி - சித்திராபதி சிறுநகையடைந்து, அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில்-இளவரசர் பெருந்தகையே நின் கனவிற்றோன்றி ஒருத்தி கூறியதனை விடுவாயாக, காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்காயினும் சிலவோ செப்பின்-கூறுங்கால் வானவர்களிடத்தும் காமக் கள்ளாட்டின் கண் மயங்கிச் செய்த செய்கைகள் சிலவாமோ ;

காமக் கள்ளாட்டிடை - காமமாகிய கள்ளை உண்டவழி. அறிவை மயக்குதலானும், வெளிப்படுந்தோறும் விருப்பத்தை யுண்டாக்குதலானும் காமம் கள்ளினை யொப்பதாயிற்று ; 1 "களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம், வெளிப்படுந் தோறு மினிது" என்பது காண்க. தேவர்களும் மயங்கிச் செய்தன பல வென்றபடி.

90--98. மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ் செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச் செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர் வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர் மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத் தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில் - கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே ;
துயரெய்தி அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க. இந்திரன் கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையை விரும்பிச் சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது புராணக்கதை. மேரு - இமயம் ; 2"இமையவில் வாங்கிய" என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் -


1 குறள். 1145. 2 கலி. 38.