தருப்பைக் காடு ; அதனை யுடையதொரு பொய்கையை உணர்த்திற்று. முன்னொரு
காலத்தில் அங்கிவானவன் எழுமுனிவர் மனைவியரை விரும்பி அவ்வேதனைபொறுக்கலாற்றாது காட்டிற்குச்சென்றபொழுது, அவன் எண்ணத்தை யறிந்த அவன் மனைவியாகிய
சுவாகாதேவி எழு முனிவர் மனைவிகளுள் அருந்ததி யொழிந்தோர் வடிவத்தை
முறையே எடுத்து, வேறுவேறு காலங்களிற் சேர்ந்து அவன் வேட்கையைத்
தணித்தாள் என்பதும் புராணக்கதை.
98--102. கன்னிக்
காவலும் கடியிற் காவலும் - கன்னிப் பருவத்திற் காவலும் மணத்தின்
பிற்காவலும், தன்உறுகணவன் சாவுறிற் காவலும்-தன்னை அடைந்த கணவன்
இறப்பிற் காவலும் ஆகிய இவற்றை, நிறையிற் காத்துப் பிறர்பிறர்க்
காணாது-உளத்தைக் கற்பு நெறியில் நிறுத்தலாற் காத்து அயலாரை நோக்காமல்,
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவனையன்றித் தெய்வத்தையும்
தொழாத, பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள் - குலமகளிர்தம்
மரபில் தோன்றியவள் அல்லள் ;
குலமகளிர் கன்னி
முதலிய முந்நிலையிலும் நிறையாற் றம்மைக்காத் தொழுகுவ ரென்றதனால்
பொதுமகளிர்க்கு அந் நிலை வேறுபாடும் காத்தலும் இல்லை யென்றவாறாயிற்று.
1"மகளிர்,
நிறைகாக்குங் காப்பே தலை," "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்"
என்பன காண்க.
103--111.
நாடவர் காண நல் அரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி-இலக்கணப்படி
அமைத்த நல்ல அரங்குகளில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம்
ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, சுருப்பு நாண் கருப்புவில்
அருப்புக்கணை தூவ - வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக்கொண்ட
அநங்கன் அரும்புகளாகிய அம்புகளைப் பொழிய, செருக்கயல் நெடுங்கண்
சுருக்கு வலைப்படுத்து-போர்செய்யுங் கயல்மீனை யொத்த நீண்ட கண்களாகிய
சுருக்கு வலையால் அகப்படுத்தி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்கு
- தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டு
மனையிற் சென்று, பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி - பண்போலும்
இனிய மொழிகளால் பொன் ஆடை அணி முதலிய பல பொருள்களையும் வாங்கி,
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - தேனையுண்டு மலரைத் துறக்கும்
வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையரை,
பான்மையில் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் - தன் வயமாகப் பிணித்து
அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல், கோல்முறை அன்றோ குமரற்கு