பக்கம் எண் :

பக்கம் எண் :247

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

   கேட்ப - நங்காய் நீ நற்றவம் செய்ய மேற்கொண்டது என்ன
   காரணம் அதனைக் கூறுவாயாக    என்று துணிந்த கேட்க;

இடங்கழி - வரம்பு கடந்த; 1 "இடங்கழி நெஞ்சத் திளமையானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல் இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய தவமென்றும் ஆம்; 2 "நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'''' என்றார் இளங்கோடிகளும். உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, யானே கேட்டல் இயல்பெனச் சென்று, ''புரிந்தது என்கொல் சொல் லாய்'' என்று கேட்ப என்க.

128--133. என் அமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன் அடி தொழுதலும் தகவென வணங்கி-இவன் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலனாகலின் இவனுடைய அடிகளை வணங்குதலும் தகுதியே எனப் பணிந்து, அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணு கினும்-என் உள்ளம் ஓட்டை போய் அவனிடம் கிட்டினும், இறைவளை முன் கை ஈங்கிவன் பற்றினும் - இறையினையுடைய வளை யணிந்த முன் கையை இவன் பற்றினும், தொன்று காதலன்சொல் எதிர் மறுத்தல் - பழம்பிறப்பிற் கணவனுடைய சொல்லை எதிர் மறுத்தல், நன்றி அன்றென நடுங்கினள் மயங்கி-நன்மையன்று என நடுக்கமுற்று மயங்கியவளாய் ;

ஈங்கிவன் : ஒரு சொல். அறைபோதல் - கீழறுத்துச் செல்லுதல், அணுகினும் பற்றினும் என்பன எதிர்காலத்தில் வந்தன. மறுத்தலாவது விடைகூறா தொழிதல்.

134--139. கேட்டது மொழிவேன் கேள்வியாளரில் தோட்ட செவியை நீ ஆகுவை ஆமெனில்-கேள்வியாளர்போல நீ துளைக்கப் பட்ட செவியுடையை ஆகுவையானால் நீ கேட்டதற்கு மறுமொழி கூறுவேன் ; பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது - பிறத்தலும் முதுமை யெய்தலும் நோய்ப்பட்டு வருந்துதலும் இறத்தலும் உடையது ; இடும்பைக் கொள்கலம்- துன்பத்திற்குக் கொள்கலமானது ; மக்கள் யாக்கை இது என உணர்ந்து - மக்கள் உடம்பாகிய இது என அறிந்து, மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் - மேன்னையுடைய அருளறத்தினை விரும்புவேனாயினேன் ;

ஆகுவை யாமெனில் மொழிவேன் என மாறுக. கேள்வியாளர் - உண்மைப் பொருளைக் கேட்டுணர்பவர்; 3 "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி'''' என்பது ஈண்டு உணர்தற் பாலது. மக்கள் யாக்கையாகிய இது உடையது கொள்கலம் என வுணர்ந்தென்க.

1 சிலப். 23 : 37. 2 சிலப். 10 : 223. 3
குறள். 418 .