நல்லறம்-அருளறம்:
தயாதருமம்,
1
"வினையின்
வந்தது வினைக்கு விளையாவது,......, மக்கள் யாக்கை யிதுவென உணர்ந்து''''
என இந்நூலுள் முன்னர் யாக்கையி னிழிபு கூறப்பட்டிருத்தலும் காண்க.
|
140--142. மண்டமர்
முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ-மிக்குச்
செல்லுகின்ற போரையழிக்கும் களிற்றினை யொத்த ஆடவர்க்கு மகளிர்
கூறும் பேரறிவும் உண்டோ, கேட்டனை ஆயின் வேட்டது செய்கென - இதனைக்
கேட்டா யாதலின் இனி நீ விரும்பியதைச் செய்க என்று கூறி;
|
அமரின்கண் பகைவரைக்
கொல்லும் என்றுமாம். களிறனை யார்க்கு என்றது முன்னிலைப்புறம்.
"இளமை நாணி முதுமை யெய்தி ......செறிவளை மகளிர் செப்பலு முண்டோ"
(4: 107 - 10) என முன்னர்ச் சுதமதி உதயகுமாரனுக்கு நீதி கூறியவாறுங்
காண்க.
|
143--150. வாள்திறல்
குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன்
புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும்
முற்பட்ட முதல்வியாகிய சம்பாபதி அமர்த்திருக்கின்ற, குச்சரக்
குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ்விடத்தில்,
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர்
யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ்
விரிகின்ற மலர்மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து,
மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி,
காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்- காயசண்டிகை என்னும் விஞ்சை
மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலைதான் வந்து தோன்ற - மணிமேகலை
வெளியே வந்து தோன்ற ;
|
முத்தை: முந்தை
யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை -
கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை.
ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக்
கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப்
பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை
மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும்
மந்திரத்தை.
|
151--158. அணிமலர்த் தாரோன் அவள்பாற்
புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக்கொண்ட
நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண்
உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம்
பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த
திருவோட்டைப் பெரும்பசியால்வருந்திய
|