5
10
15
20
25
|
பசியால் மெலிந்தவர்களுக்கு உயிர் மருந்தாகவுள்ளது" என்று கூறினள். பின், அரசன்,
"யான் செய்ய வேண்டுவது யாது?" என்று கேட்ப, அவள், "சிறைக்கோட்டத்தை யழித்து
அறவோர் வாழுங் கோட்டமாகச் செய்தல் வேண்டும்" என்றாள். அரசன், அவள்
விரும்பிய வண்ணமே செய்வித்தனன். (இதன்கண் அரசனது பொழில் விளையாட்டுக்
கூறுமிடத்துள்ள இயற்கைப்புனைவு முதலியன மிக்க இன்பம் பயப்பன.)]
முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி
மதுமலர்த் தாரோன் வஞ்சினங் கூற
ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன்
நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென.
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திர மொன்று தெய்வங் கூறலும்
உதய குமரன் உள்ளங் கலங்கிப்
பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி
அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றே
செங்கோல் காட்டிய தெய்வமுந் திப்பியம்
பையர வல்குல் பலர்பசி களையக்
கையி லேந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடிபிழைத் தாயெனச்
சித்திர முரைத்த இதூஉந் திப்பியம்
இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின்
பின்னறி வாமெனப் பெயர்வோன் றன்னை
அகல்வாய் ஞாலம் ஆரிரு ளுண்ணப்
பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப
மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்
காமர் செங்கை நீட்டி வண்டுபடு
பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து
நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீனையின் கிளைநரம்பு வடித்த
இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப்
பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின்
|