முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :253
Manimegalai-Book Content
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
30
35
40
45
50
55
60
உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட
மறுவில் செய்கை மணிமே கலைதான்
மாதவி மகளாய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிட லீயான்
காய்பசி யாட்டி காயசண் டிகையென
ஊர்முழு தறியும் உருவங் கொண்டே
ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடனவர்
மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராமென
முதியாள் கோட்டத் தகவையின் இருந்த
அமுத சுரபியை அங்கையின் வாங்கிப்
பதியகந் திரிதரும் பைந்தொடி நங்கை
அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை
ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை
வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து
கோட்டங் காவலர் கோமகன் றனக்கிப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்புடைத் தாக இசைத்துமென் றேகி
நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன்
அடியிற் படியை யடக்கிய அந்நாள்
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு
போதவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மடமயிற் பேடையுந் தோகையுங் கூடி
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்