பக்கம் எண் :256 |
|
Manimegalai-Book Content
19.
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
|
135
140
145
150
155
160
|
மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர்
அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு
மொய்கொண் மாக்கண் மொசிக்கவூண் சுரந்தனள்
ஊழிதோ றூழி உலகங் காத்து
வாழி யெங்கோ மன்னவ என்றலும்
வருக வருக மடக்கொடி தானென்று
அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின்
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத்
தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார்
யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று
அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்
விரைத்தார் வேந்தே நீநீடு வாழி
விஞ்சை மகள்யான் விழவணி மூதூர்
வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக
தீதின் றாக கோமகற் கீங்கீது
ஐயக் கடிஞை அம்பல மருங்கோர்
தெய்வந் தந்தது திப்பிய மாயது
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது
ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென
யான்செயற் பாலதென் இளங்கொடிக் கென்று
வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும்
சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியரென
அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக்
கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க் காக்கினன் அரசாள் வேந |
|
உரை
|
1--6.
| முதியாள் திருந்தடி மும்மையின்
வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த
|
|
|
|
|