தாரோன் வஞ்சினம் கூற - தேன் பொருந்திய மலர்மாலைகளையுடைய உதயகுமரன் வஞ்சினங்
கூறுதலும், ஏடு அவிழ்தாரோய் எங்கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை
என - இதழ்விரிகின்ற மாலையை யுடையவனே எம் தலைமகள் முன்னர் ஆராயாது துணிவுடன்
சூளுறவு செய்து நா வறுமை யுற்றனை என்று, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்-கைவல் சிற்பரால் இயற்றப்பட்டு விளங்கிய
தொழில் அமைந்த சித்திரம் ஒன்றிற் பொருந்திய தெய்வம் உரைத்தலும் ;
மும்மையின் - உளம் உரை உடல் என்னும் முக் கரணங்களால் என்றுமாம் ; முறைமையின்
என்பதும் பாடம். நா நல்கூர்தலாவது பயனில மொழிதல். வித்தகர்-சிற்பம் வல்லோர்
; "வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கை" (3: 167-8)
என முன்னர் வந்தமையுங் காண்க. ஒன்று-பொருந்திய ; அதிட்டித்த.
உதயகுமரன் உள்ளம் கலங்கி - உதயகுமரன் மனக் கலக்க முற்று, பொதியறைப் பட்டோர்போன்று
மெய் வருந்தி - சாளரமில்லாத கீழறையில் அகப்பட்டோரைப் போல உடல் வருந்தி,
அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே - மணிமேகலைமீது கொண்ட எண்ணத்தை
மறப்பாய் என்றோ, செங்கோல்காட்டிய தெய்வமும் திப்பியம் - செங்கோன்
முறையை எடுத்துக் காட்டிய தெய்வங் கூறியதும் வியப்புடைத்து, பையர வல்குல் பலர்
பசிகளையக் கையிலேந்திய பாத்திரம் திப்பியம் - மணிமேகலை பலருடைய பசியையும்
நீக்குதற்குக் கையில் ஏந்திய கடிஞையும் வியப்புடைத்து, முத்தை முதல்வி அடிபிழைத்தாய்
எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்-எம் தலைவியின் திருவடியில் பிழை
புரிந்தாய் என்று இவ் வோவியங் கூறிய இதுவும் வியப்புடைத்து, இந்நிலை எல்லாம்
இளங்கொடி செய்தியின் பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை - இவற்றின்
உண்மையை யெல்லாம் மணிமேகலையின் செயலால் பின்பு அறிவோமென எண்ணி அங்குநின்றும்
மீண்ட உதயகுமரனை ;
பொதியறை - புழுக்கறை : சிறு துவாரமுமின்றி மூடப்பட்ட கீழறை; 1"போதார்
பிறவிப் பொதியறையோர்" என்பது காண்க. தெய்வம்-மணிமேகலா தெய்வம். தெய்வம்
கூறியதுமென்க. திப்பியம்- ஈண்டு வியப்பென்னும் பொருட்டு ; தெய்வத்தன்மையுமாம்.
அரவின் பை யென மாறுக. பை-படம். பாத்திரமும் என எண்ணும்மை விரிக்க முத்தை
: விகாரம்.
அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ண-இடமகன்ற பூமியை நிறைந்த இருளானது உண்ணுமாறு,
பகல் அரசு ஓட்டி - கதிரவனாகிய |