பக்கம் எண் :

பக்கம் எண் :258

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை



























23--28.



அரசனை ஓட்டி, பணைஎழுந்து ஆர்ப்ப - பறையெழுந்து ஒலிக்க, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு - அந்திக் காலமாகிய நெற்றியும் வானிலுள்ள பிறையாகிய மருப்பும் உடைய, நீலயானை- கரிய நிறமுடைய இரவாகிய யானை, மேலோர் இன்றி - பாகர் ஓரு வரும் இன்றி, காமர் செங்கைநீட்டி-விருப்பமாகிய துதிக்கையை நீட்டி, வண்டுபடு பூ நாறு கடாஅம் செருக்கி - வண்டு மொய்க்கும் பூவின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து களித்து, கால் கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர - காற்றைப் போல எழுந்து காவலைக் கடந்த தோற்றத்துடன் தொடர்ந்து வர ;

முன்னுள்ள விசேடணங்களால் ''நீலயானை'' என்றது இரவாயிற்று. இராத்திரியை யானையாக உருவகிப்பவர் அதற் கியைபுபடப் பிறவற்றையும் உருவகஞ் செய்கின்றார். "ஞாலம் ஆரிருள் உண்ண'' என்பது 1"உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலூமரபே" என்பதனான் அமைக்கப்படும். கொல்களிற்றின் செல்கையை அறிவித்தற்குப் பறையறைவித்தலுண்மையின் ''பணையெழுந்தார்ப்ப'' என்றார். 2"வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்" என்பது காண்க ; வென்றி முரசுங் கொள்க. மேலோரின்றி என்றது பாகரை வீசி யென்றபடி ; 3"மேலோர் வீசி" என்றார் பிற சான்றோரும், காமர் - காமம் என்னும் பொருட்டு. கடக்களிறு கைவீசிச் செல்லுமாகலின் '' காமர் செங்கை நீட்டி'' என்றார். பூ - வேங்கைப்பூ ; ஏழிலைப் பாலையின் மலருமாம்; யானையின் மதம். அப்பூக்களின் மணமுடையதாதலை, 4"விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ" 5"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்த தோர் களிறு" என்பவற்றானறிக. 6"கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு" என்பதனால் யானை காற்றுப்போற் கிளர்ந்தெழு மென்பதறிக.

பெயர்வோன்றன்னை நீலயானை தொடர வென்க : இரவு வர என்றவாறாயிற்று.

முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு முறைமையாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்புகளைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாளவொற்றாகிய வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக்


1 தொல். பொருளியல். 19. 2 பொருந. 171-2. 3 மதுரைக்.
381. 4 கம்ப. நகர. 58. 5 கம்ப. வரை. 6. 6 முருகு. 82.