பக்கம் எண் :

பக்கம் எண் :259

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை















29--35.














36--41.

குருகின் உயிர்த்து அவன் போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர் ; வளையோர்-வளையணிந்த மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ் ; நால்வகை யாழுளொன்று ; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு ; உழை சட்சமாகலின், சடசக்கிரமத்தில் அதற்கைந்தாவதாகிய குரல் கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பனகுரல் முதல் ஒன்றற்கொன்று கிளையாகும் ; ஆகலின் இவ்வைத்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு ; "கிளையெனப் படுவ கிளங்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல் ; தெறித்தலுக்காயிற்று. இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம், சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு ; பூவா வஞ்சி முதலியன போல வெளிப்படையென்னும்இலக்கணத்தது. அவன் - உதயகுமரன்.

உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட - உறைவிடமாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான் - குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின் மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன் புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே - ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப் போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும் அருந்துணையாகி ;

உள்வரி - வேற்றுரு ; பொய்வேடம். விடலீயான் : வினைத்திரி சொல். கைவிடனென நினைந்து என ஒரு சொல் வருவித்துரைக்க.

ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் - வாங்குதலும் கொடுத்தலும் இரப்போர் கடனாம் ஆகலின், அவர் மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே - அவர் எவ்விடத்தும் வலிந்து சென்று கொடுத்தல் சிறப்புடையது என்று, நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனராமென-நூற்பொருள்களை அறிந்தோர் ஆராய்ந்துரைத்தனர் என்று கருதி, முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த - சம்பாபதி கோயிலின் உள்ளே இருந்த, அமுதசுரபியை அங்கையின் வாங்கி - அமுதசுரபியை அழகிய கையிற்கொண்டு, பதியகம் திரிதரும் பைந்தொடி நங்கை - நகரத்தின்கண்ணே சுற்றுகின்ற பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை ;