பக்கம் எண் :

பக்கம் எண் :260

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை
42--46.


















47--50

அதிர்கழல் வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன் அடிக்குப் பிழைசெய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக்கோட்டம் - தண்டிக்கும் தண்டத்தினையுடைய சிறைச்சாலையின்கண், விருப்பொடும் புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே பசியுற்றிருக்கும் அரிய உயிரையுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும் - வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும் ;

இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத்தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது, பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14 : 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப் போந்தமையுங் காண்க.

ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து-இங்ஙனம் பலரையும் உண்பித்த பாத்திரம் ஒன்றே என வியப்புற்று, கோட்டங் காவலர் - சிறைக்கோட்டங் காப்பவர், கோமகன் தனக்கு - அரசனுக்கு, இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் - இப் பாத்திரத்தின் தானச் சிறப்பையும் இதனைக் கொண்ட இளங்கொடியின் செயலையும், யாப்புடைத்தாக இசைத்தும் என்று ஏகி - உறுதி யுடைத்தாகக் கூறுவோம் எனச் சென்று ;

கோட்டங் காவலர் வியந்து தானமும் செய்தியும் கோமகனுக்கு இசைத்துமென் றேகி யென்க,

நெடியோன் குறள் உருவாகி நிமிர்ந்து தன் அடியிற்படியை அடக்கிய-திருமால் வாமன வடிவங்கொண்டு பின் பேருருவமாய்ப் பூமியைத் தன் திருவடியின்கண் அடக்க, அந்நாள்-அற்றைநாளில், நீரிற்பெய்த - பூமியை நீருடன் அளித்த, மூரி வார் சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்-வலிய பெரிய வில்லையுடைய மாவலியின் வழித்தோன்றலாகிய அரசுனுடைய புகழ்மிக்க திருமகளாகிய, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு - சீர்த்தி என்னும் பெயருடைய செல்வமிக்க தேவியுடன், போது அவிழ்பூம்பொழில் புகுந்தனன்புக்கு - பூக்கள் விரிந்த அழகிய சோலையிற் சென்று புகுந்து ;


51--56.