பக்கம் எண் :

பக்கம் எண் :263

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை
75--78.












79--92.













பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு - பசிய இலைகள் நெருங்கிய பசிய தண்டினையுடைய மூங்கிலுடன், வால் வீசெறிந்த மராஅம் கண்டு-வெள்ளிய பூக்கள் நெருங்கிய வெண்கடம்பினைக் கண்ணுற்று, நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம்என - கண்ணன் தன் முன்னோனொடு நிற்கின்றனனாம் என்று, தொடிசேர் செங்கையில் தொழுது நின்று ஏத்தியும்-வீரவளை யணிந்த சிவந்த கைகளாற் கும்பிட்டு நின்று துதித்தும் ;

முன் - தமையன் ; பலதேவர். கழைக்குக் கண்ணனும் வெண் கடம்பிற்குப் பலதேவரும் உவமைகள். வெண்கடம்பிற்குப் பலதேவர் உவமையாதல் 1"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" 2 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" என்பவற்றுள்ளும் காணப்படுமாறறிக.

ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும், தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின் முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம் தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப் பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக்களைக் கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப் போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும், அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின் அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் - நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் - பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு - அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து - அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச் சென்று விளையாட்டை விரும்பிச் செய்து;


1 கலி. 26. 2 கார். 19.