93--99.
100--106
|
நாடகம்
- கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய நன்னூலென்க; இன்பத்
துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற
பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு
- குரல், துத்தும், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.
பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும்,
அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல்,
பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத்
தொழிற் பெயர் ;
1"பண்ணமை
முழவின் கண்ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய.
திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும்
ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர்
முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்டயர்ந்து என்க.
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் - குருந்தும் செம்முல்லையும்
அழகிய பூக்களையுடைய செருந்தியும், முருகுவிரி முல்லையும் கருவிளம்
பொங்கரும் - மணம் விரிகின்ற முல்லையும் கருவிள மரச்செறிவும்,
பொருந்துபு நின்று திருந்து நகைசெய்து- அமர்ந்திருந்து இன்ப நகை
புரிந்து, குறுங்கால நகுலமும் நெடுஞ்செவி முயலும் - குறிய கால்களையுடைய
கீரியையும் நீண்ட காதுகளையுடைய முயலையும், பிறழ்ந்து பாய் மானும்
இறும்பு அகலா வெறியும் - துள்ளிக் குதிக்கின்ற மானையும் குறுங்காடுகளினின்று
நீங்காத ஆட்டையும், வம்மெனக் கூஉய் மகிழ்துணையொடு தன் செம்மலர்ச்
செங்கை காட்டுபு நின்று - வாருமென அழைத்துப் பெருந்தேவியுடன் தன்
சிவந்த மலர் போன்ற செவ்விய கையாற் காட்டி நின்று ;
செருந்தி, கருவிளை யென்பன மர வேறுபாடுகள். பொங்கர் - சோலை;
சோலை போலும் மரச் செறிவு. இறும்பு - குறுங்காடு. வெறி- ஆடு. மகிழ்துணை
- இராமாதேவி. மகிழ்துணையொடு பொருந்துபு நின்று நகைசெய்து வம்மெனக்
கூஉய்ச் செங்கை காட்டுபு நின்று என்க.
.மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய
அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும்
- இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும்,
எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்கவேண்டுமாயின்
நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்குதற்குரிய எந்திரம் அமைந்த
கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும்
- வந்து விழுகின்ற
1 சிலப்.
3: 61. |