107--116.
|
அருவியும்
மலர்க்களாகிய அழகிய பந்தரும், பரப்புநீர்ப் பொய்கையும் கரப்பு
நீர்க்கேணியும் - நீர்ப்பரப்பினையுடைய வாவியும் மறைந்திருக்கின்ற
நீரையுடைய கிணறும், ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
- ஒளிந்து வாழ்கின்ற மறைவிடங்களும் பளிக்கறையாகிய இடமும் ஆகிய,
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- எவ்விடத்தும் திரிந்து
தங்கி விளையாடி ;
இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இரு திங்கள்கள். இளங்கால்-இளந்
தென்றற்காற்று, மந்தமாருதம். இளவேனிற் காலத்திலே இளந் தென்றல்
வீசாநிற்கக் காமவேட்கை விஞ்ச மன்னவன் விளையாடினான் என்பார்,
''மன்னவன்றானும் மைந்தனும் வேனிலும் செல்வனும் விளையாடி'' என்றார்.
1"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும், தண்பூங் காவுந்
தலைத்தோன் றருவிய, வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும், இளையோர்க்
கியற்றிய விளையாட் டிடத்த, சித்திரப் பூமி வித்தக நோக்கி"
என வருவது ஈண்டு அறியற்பாலது.
மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்-மகத நாட்டிற் பிறந்த மணி வேலைக்காரரும்
மகாராட்டிரத்திற் பிறந்த பொற்கம்மியரும், அவந்திக்கொல்லரும்
யவனத்தச்சரும்-அவந்திநாட்டுக் கொல்லரும் யவனநாட்டுத் தச்சரும்,
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி-தண்ணிய தமிழ்நாட்டுத் தோன்றிய
தொழில் வல்லாருடன் கூடி, கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை-உள்ளங்
கொண்டு நன்கு செய்தமைத்த கண்களைக் கவரும் தொழிற் சிறப்பினையுடைய,
பவளத் திரள்கால் பன்மணிப் போதிகை - பவளத்தாற் சமைத்த திரட்சியுடைய
தூண்களும் பல்வகை மணிகளாலாகிய போதிகைக் கட்டைகளும், தவள நித்திலத்
தாமம் தாழ்ந்த-வெள்ளிய முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட, கோணச்
சந்தி மாண்வினை விதானத்து - கோணமாகிய சந்தினையுடைய மாட்சிமைப்பட்ட
தொழிலமைந்த மேற்கட்டியும் அமைந்த, தமனியம் வேய்ந்த வகைபெறு
வனப்பின்-பொன்னால் வேயப்பெற்ற வகையமைந்த அழகினையுடைய, பைஞ்சேறு
மெழுகாப் பசும் பொன் மண்டபத்து-பசிய சாணத்தான் மெழுகப்படாத
பசும் பொன் மண்டபத்தின்கண், இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
- இந்திரச் செல்வத்தினையுடைய மன்னவன் இனிது சென்று ஏறுதலும் ;
மராட்டம் : மகாராட்டிரம் என்பதன் மரூஉ. யவனம் என்பது பரத கண்டத்தின்
புறத்ததாகிய ஓர் நாடு. இங்ஙனம் ஒவ்வொரு நாட்டு வினைஞர் ஒவ்வொரு
தொழிலிற் சிறந்திருந்தன ரென்பது, 2 "யவனத் தச்சருமவந்திக்
கொல்லரும், மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும், பாடலிப் பிறந்த
பசும்பொன் வினைஞரும், கோசலத் தியன்ற வோவியத்
1 பெருங்.
1, 33: 3-7. 2 பெருங். 1, 58 : 40 - 4. |