117--130.
|
தொழிலரும்,
வந்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ்
- தமிழ் நாடு ; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின்
அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின்
மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி
- கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம் ; ஆவின்சாணம். 1"பைஞ்சேறு
மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால்
மெழுகப் படாதாயிற்று ; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம்
; 2"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என
வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய
பொன் மண்டபமென்க.
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப்போர்க்கு உரைத்து
அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான
இடத்தில் தாம் நின்றதன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது
உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின்
கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம்
போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள்
வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க
வீரரும் செறிந்த, தலைத்தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப்
படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய
சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங்கொடி - வில்லும் கயலுமாகிய
நெடிய கொடிகளை, செருவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன்
தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளையுடைய
ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக்
கொண்ட - காரி யாற்றின்கண் கைப்பற்றிய'' காவல் வெண்குடை வலிகெழு
தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடையினையும்
வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண்கிள்ளி, ஒளியொடு வாழி
ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ் வாயாக, வாழி
எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே
வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர்
ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக ;
(48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து,
மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால்
வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச்
செல்லுதல் வஞ்சித்திணையாகும்
1 பெரும்பாண்,
218. 2 சீவக. 1414. |