131--138.
139--145.
|
இதனை,
1"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென்
றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச்
சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க.
இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்;
மிக்க வண்மையையுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படுபவன்.
கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய
நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணையாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும்
தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின்
பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, 2"செல்கதிமுன்
னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி -
கடவுட்டன்மை ; 3"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி,
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும்
இம் மேற் கோள் கொண்டே 4"இளைய ரினமுறைய ரென்றிகழார்
நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் ''ஒளி - உறங்கா
நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,'' என்றுரைத்தார்.
மன்னும் ஓவும் அசைகள்.
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும்
ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல்
வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு
புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய
சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர்
வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப்
பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க
ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு
நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள்,
ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும்
உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும்
;
நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை; ஈறு திரிந்தது.
பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; 5"மையூன்
மொசித்த வொக்கலொடு" என்பது காண்க.
வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
- அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த
உளத்தினோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று-
1 தொல்.
புறம், 7. 2 பெரிய. திருநா. 343. 3சீவக.
248. 4 குறள். 698- 5 புறம். 96.. |