146--154.
155--158.
|
வாயில்
காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள்
வாழிய என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க
என்று கூற, தாங்கரும் தன்மைத் தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய
தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார், யாங்காகியது இவ்
வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக்
கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும்
- அவள் கூறுவாள் ;
அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக வென்று வாயிலாளர்க்குக் கூற
வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை.
விரைத்தார் வேந்தே நீ நீடுவாழி - மணம் பொருந்திய மாலையை யணிந்த
மன்னவ ! நீ நீடுழி வாழ்வாயாக, விஞ்சை மகள் யான் - யான் ஓர்
வித்தியாதர மகள், விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் - விழாவாலாகிய
எழில் நிறைந்த இத் தொன்னகரில் வஞ்சத்தால் திரிந்தேன், வாழிய
பெருந்தகை - அரசர் பெருந்தகை வாழ்க, வானம் வாய்க்க - மழை தவறாது
பொழிக, மண்வளம் பெருகுக - புவியில் வளம்பெருகுக, தீதின்றாக கோமகற்கு
- அரசனுக்குத் தீதீன்றி நன்மையுண்டாகுக, ஈங்கிது ஐயக் கடிஞை-இஃது
ஓர் பிச்சைப் பாத்திரம், அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது
- உலக வறவியிலுள்ள ஒரு தெய்வத்தாற் றரப் பட்டது, திப்பியமாயது
- தெய்வத்தன்மை யுடையது, யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது -
யானைத்தீ யென்னும் போக்குதற் கரிய பசிநோயைப் போக்கியது,
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என-இஃது உடம்பு மெலிந்த மக்களுக்கு
உயிரை நிறுத்தும் மருந்தாவது என்று கூற ;
விஞ்சை மகள் என்பதற்கு மந்திரத்தால் உருமாறிய மகள் என்று மணிமேகலைக்
கேற்பப் பொருள்கொள்க. வஞ்சத் திரிந்தேன் என்பதற்கும் எனது
தீவினையால் திரிந்தேன் என்றும், வேற்றுருக்கொண்டு திரிந்தேன்
என்றும் இருபொருள் கொள்க. உடை : வினைத்தொகை ; உடையவென்றுமாம்
; பிறிதொன்றுமில்லாத வென்றபடி
யான் செயற்பாலது என்இளங்கொடிக்கு என்று வேந்தன் கூற - அரசன்
யான் நினக்குச் செய்யவேண்டியது யாது என வினவ, மெல்லியல் உரைக்கும்
- அவள் கூறுவாள், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என - சிறைச்சாலையை அழித்து
அருள் உள்ளமுடைய அறவோர் வாழுங் கோட்டமாக்கும் அச் செயலே வாழ்வாயாக
என்றுரைக்க ;
|