பக்கம் எண் :

பக்கம் எண் :269

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உரை
 


159--162.























இளங்கொடிக்கு முன்னிலையிற் படர்க்கை. ஆக்குமது நீ செயற் பாலதென என்க.

அருஞ்சிறை விட்டு ஆங்கு ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்த - அரிய சிறையிலுள்ளோரை விடுத்து அவ்விடத்தில் மணிமேகலை கூறிய பெருந் தவமுடையோர்களால் பெரும் பொருளை எய்துமாறு, கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசாள் வேந்து என்-கறைப்பட்டோரில்லாத சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினான் அரசுபுரியும் வேந்தன் என்க.

பெரும் பொருள் - அறம் ; ஞானமுமாம். கறையோர் - கடமை (இறை) செலுத்த வேண்டியவரகள். கறையோரில்லா என்றமையால் அரசன் கறை வீடு செய்தமை பெற்றாம். செங்கோல் வேந்தர் கறைவீடு செய்வராதலை. 1"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங், கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்......கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்" 2"சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணுங், கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென" என்பவற்றானறிக. சிறையோர் கோட்டம் - சிறைக் கோட்டம்.

தாரோன் வணங்கி வஞ்சினங்கூறத் தெய்வங் கூறலும் அவன் உள்ளங் கலங்கி வருந்தி அறிவாமெனப் பெயர்வோன்றன்னை (இரவாகிய) நீலயானை தொடர எஃகு உளங்கிழிப்ப அவன் பொத்தி உயிர்த்துப் போயபின், மணிமேகலை நுனித்தனரென்று கருதி வாங்கிக் கோட்டம் புகுந்து மாக்களை ஊட்டலும், காவலர் வியந்து கோமகனுக்கு இசைத்துமென்றேகி, திருவன் சென்று ஏறலும், வாயிலுக்கிசைத்து வணங்கி, ''மன்னவ, வம்பமாதர் ஊண் சுரந்தனள்'' என்றலும், ''வருக வருக என்று அரசன் கூறலின், மடக்கொடி வாயிலாளரிற் சென்று, ''நின் அருள் வாழிய'' என ''யாங்காகியது" என்று அரசன் கூறலும், ஆயிழை உரைப்பவள் ''உயிர் மருந்து இது'' என, ''யான் செயற்பாலது என்'' என்று வேந்தன் கூற, மெல்லியல் உரைப்பவள், ''நீ செயற்பாலது அறவோர்க்கு ஆக்குமது'' என, வேந்து பெரும்பொரு ளெய்துதற்குக் கோட்டத்தை அறவோர்க்கு ஆக்கினன் என வினை முடிவு செய்க.


1 சிலப். 23: 126-31. 2 சிலப். 28: 203-4

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாகிய காதை முற்றிற்று.