பக்கம் எண் :

பக்கம் எண் :270

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை

[அரசன் பணியால் சிறைச்சாலை பலவகை அறங்களும் நிகழ்தற்குரிய சாலையாய் விளங்கிற்று. உதயகுமரன் இந் நிகழ்ச்சிகளைக் கேட்டு, "மணிமேகலை உலகவறவியை நீங்கி வெளியே வந்தபொழுது, அவளைக் கைப்பற்றிக் கொணர்ந்து தேரிலேற்றி, அவள் கற்ற விஞ்சைகளையும் அவள் கூறும் முதுமொழிகளையும் கேட்பேன்" என்று தன்னுள்ளே எண்ணிக்கொண்டு சென்று அவளிருக்கும் உலகவறவியில் ஏறினன். காஞ்சனனென்னும் விஞ்சையன், "காயசண்டிகைக்கு விருச்சிக முனிவன் இட்ட சாபத்தை அவள் நுகர்தற்குரிய பன்னீராண்டும் சென்றன ; அவள் இன்னும் வாராமைக்குக் காரணம் யாதோ" என்று மிக்க கவலையுற்று, தனது பதியை நீங்கி விசும்பின் வழியே வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் இறங்கிப் பூதசதுக்கம், பூஞ்சோலைகள், மாதவரிடங்கள், மன்றங்கள், பொதியில்கள் ஆகிய இடந்தோறும் சென்று சென்று தேடித் திரிந்து, காயசண்டிகை வேடம் பூண்டு உணவளித்து மாந்தர பலருடைய பசியையும் மாற்றிக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு, அவளைக் காயசண்டிகை யென்றே துணிந்து அருகிற் சென்று அவளை நோக்கி, "நின் கையில் ஏந்திய பாத்திரம் ஒன்றேயாயினும் உண்போர் பலராக வுள்ளனர் ; உன்னை வருத்திய யானைத் தீயாகிய நோயை ஒழித்தற்குத் தேவர்கள் இதனை அளித்தார்களோ?" என்று கூறிப், பின்பு, பழைய நட்பினைப் புலப்படுத்தும் மொழிகள் பலவற்றைச் சொல்லிப் பாராட்டவும், அவள் அவற்றைச் சிறிதும் மதியாமல் அவனை நீங்கி உதயகுமரனை அடைந்து அவனருகே நின்று, இளமையின் நிலையில்லாமையை அவனுக்கு அறிவுறுத்த நினைந்து, அங்கே இயல்பாக வந்த நரைமூதாட்டி யொருத்தியைக் காட்டி, முன்பு வனப்புடையனவாயிருந்த அவளுடைய உறுப்புக்கள் பலவும் இயல்பு திரிந்து அழகு கெட்டு வெறுக்கத் தக்கனவா யிருத்தலை நன்கு புலப்படுத்தி,
"பூவினுஞ் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத்
தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே"

 
என்று கூறினள். அவள் அவ்வாறு கூறுதலைக் கேட்ட காஞ்சனன் "யான் தன்னைப் பாராட்டிக் கூறும் சொற்களின் பொருளை இவள் கொள்கின்றிலள் ; என்னைப் பிறன்போல் நோக்குகின்றாள் ; அயலான் பின்னே செல்கின்றாள் ; காதற் குறிப்புடனே அரசன் மகனுக்கு நீதி யுரைக்கின்றாள் ; இவன் காதலனாதலினாலேயே இவள் இங்கே தங்கி விட்டனள் போலும்!" என நினைந்து வெகுண்டு, புற்றிலடங்கும் அரவைப்போல அவ் வுலகவறவியினுள்ளே புகுந்து அற்றம் பார்த்து ஒளித்திருந்தனன். அவன் அங்ஙன மிருத்தலை யறியாத உதயகுமரன், "மணிமேகலைதான் காயசண்டிகை வேடம்பூண்டு கையிலே பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வந்து நின்று நம்மை மயக்கினள் ; அறிந்தவன் போன்று பழமை கூறிப் பாராட்டிய அயலானொருவன்