பக்கம் எண் :

பக்கம் எண் :271

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை

இங்கிருத்தலால் இவள் இன்றிரவில் இவ்விடத்தைவிட்டு நீங்குவாளல் லள் ; இவள் செய்தியை இவ்விரவின் இடையாமத்தே வந்து தெரிந்து கொள்வோம்," என்று தன்னுள் எண்ணிக் கொண்டே சென்று தன் இருப்பிட மடைந்தான். மணிமேகலையும் காயசண்டிகை வடிவத்தோடே சம்பாபதி கோயிலை யடைந்து வதிந்தாள். இரவில் எல்லாரும் உறங்கிய பின்பு உதயகுமரன் முன்பு எண்ணியவாறே செல்லத் துணிந்து தனியே எழுந்து கோயிலை நீங்கி. உலகவறவியை அடைந்து, நச்சரவு கிடந்த புற்றினுள்ளே புகுவான்போல அதனுள்ளே புகுந்தான். உடனே, முன்னம் அவ்விடத்திற் புகுந்து இவன் வரவை நோக்கிக் கொண்டு சினத்துடனிருந்த காஞ்சனன், "இவன் இவள்பாலே வந்தனன்" என்று துணிந்து விரைந் தெழுந்துபோய் அவன் தோளைத் துணித்து வீழ்த்திவிட்டுக், காயசண்டிகையைக் கைப்பற்றிக்கொண்டு செல்வோமென நினைந்து அவளருகே சென்றான். அப்பொழுது அங்குள்ள கந்திற்பாவையானது, "காஞ்சன, செல்லாதே ; செல்லாதே ; இவள் உன் மனைவியாகிய காயசண்டிகை யல்லள் ; இவ் வடிவம் மணிமேகலை கொண்ட வேற்று வடிவம்; காயசண்டிகை கடும்பசி யொழிந்து வானிலே செல்லுகையில் அவளுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேட்பா பாக ; அந்தர சாரிகள் துர்க்கை எழுந்தருளியிருக்கும் விந்தமலைக்கு நேராக மேலே செல்லார் ; யாரேனும் அங்ஙனம் செல்லின், அம்மலையைக் காக்கும் ''விந்தாகடிகை'' யென்பவள் அன்னோரைச் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக் கொள்வள் ; இதனையறியாத காயசண்டிகை அம் மலைக்கு நேராக மேற்சென்று அவள் வயிற்றில் அடங்கிவிட்டாள். காஞ்சன ! இதனையும் கேட்பாயாக ; உதயகுமரன் ஊழ்வினையினால் இறந்தானாயினும், நீ ஆராயாது கொன்றமையால் மிக்க தீவினையுடையை ஆயினை; அவ் வினை உன்னை விடாதுதொடர்ந்து வருத்தும்," என்றுரைத்து. அது கேட்டு மனம் கன்றிக் காஞ்சனன் தன் நகரத்திற்குச் சென்றான்.]





5





10

அரசன் ஆணையின் ஆயிழை அருளால்
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்
தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்

அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்
அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக
ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு
வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்

சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து