பக்கம் எண் :

பக்கம் எண் :272

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை




15





20





25





30





35





40





45

அறவோர் கோட்ட மாக்கிய வண்ணமும்
கேட்டன னாகியத் தோட்டார் குழலியை
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று

பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து
பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய

உலக வறவியின் ஊடுசென் றேறலும்
மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக்
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான்
மாதவன் மாதர்க் கிட்ட சாபம்
ஈரா றாண்டு வந்தது வாராள்

காயசண் டிகையெனக் கையுற வெய்திக்
காஞ்சன னென்னும் அவள்தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து
பூத சதுக்கமும் பூமரச் சோலையும்
மாதவ ரிடங்களும் மன்றமும் பொதியிலும்

தேர்ந்தனன் திரிவோன் ஏந்திள வனமுலை
மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு
இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே யாயினும் உண்போர் பலரால்
ஆனைத் தீநோய் அரும்பசி களைய

வான வாழ்க்கையர் அருளினர் கொல்லெனப்
பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும்
விழையா உள்ளமொ டவன்பால் நீங்கி
உதய குமரன் றன்பாற் சென்று
நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித்

தண்ணறல் வண்ணந் திரிந்துவே றாகி
வெண்மண லாகிய கூந்தல் காணாய்
பிறைநுதல் வண்ணங் காணா யோநீ
நரைமையிற் றிரைதோற் றகையின் றாயது
விறல்விற் புருவம் இவையுங் காணாய்