முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :273
Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
50
55
60
65
70
75
80
இறவி னுணங்கல் போன்றுவே றாயின
கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன
குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ
நீரைமுத் தனைய நகையுங் காணாய்
சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின
இலவிதழ்ச் செவ்வாய் காணா யோநீ
புலவுப் புண்போற் புலால்புறத் திடுவது
வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண்
உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற மூலையுங் காணாய்
வெறும்பை போல வீழ்ந்துவே றாயின
தாழ்ந்தொசி தெங்கின் மடல்போற் றிரங்கி
வீழ்ந்தன விளவேய்த் தோளுங் காணாய்
நரம்பொடு விடுதோ லுகிர்த்தொடர் கழன்று
திரங்கிய விரல்க ளிவையுங் காணாய்
வாழைத் தண்டே போன்ற குறங்கிணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணா யோநீ
மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ
தளிரடி வண்ணங் காணோ யோநீ
முளிமுதிர் தெங்கின் உதிர்கா யுணங்கல்
பூவினுஞ் சாந்தினும் புலான்மறைத் தியாத்துத்
தூசினும் மணியினுந் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென
விஞ்சை மகளாய் மெல்லிய லுரைத்தலும்
தற்பா ராட்டுமென் சொன்ற்பயன் கொள்ளாள்
பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும்
மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
பவளக் கடிகையிற் றவளவாள் நகையுங்
குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள்
ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை
ஈங்கொழிந் நனளென இகலெரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள்
புற்றடங் காவிற் புக்கொளித் தடங்கினன்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்