முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :274
Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
85
90
95
100
105
110
காஞ்சன னென்னுங்க கதிர்வாள் விஞ்சையன்
ஆங்கவ ளுரைத்த அரசிளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்
வளைசேர் செங்கை மணிமே கலையே
காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி
மாய விஞ்சையின் மனமயக் குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்தறி வுரைத்தவிவ்
வம்பலன் றன்னொடிவ் வைகிரு ளொழியாள்
இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து
வந்தறி குவனென மனங்கொண் டெழுந்து
வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியினைக்
கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர்துஞ் சியாமத் தொருதனி யெழுந்து
வேழம் வேட்டெழும் வெம்புலி போலக்
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆயிழை யிருந்த அம்பல மணைந்து
வேக வெந்தீ நாகங் கிடந்த
போகுயர் புற்றளை புகுவான் போல
ஆகந் தோய்ந்த சாந்தல ருறுத்த
ஊழடி யீட்டதன் உள்ளகம் புகுதலும்
ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன்
ஈங்கிவன் வந்தனன் இவள்பா லென்றே
வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத்
தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன்
சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக்
காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம்
போகுவ லென்றே அவள்பாற் புகுதலும்
நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக்
கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும்
அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன
மணிமே கலையவள் மறைந்துரு வெய்தினள்
காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்