பக்கம் எண் :

பக்கம் எண் :279

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
 

சீயுமாம். இறும்பூது சான்ற-புதுமையும் பெருமையும் பற்றிய வியப்பு விளைத்த வென்க. வாழைத்தண்டு - இளவாழையின் தலை நீங்கிய அடிமரம். தாழைத்தண்டின் - தாழையின் அடிமரம்போல். உணங்கல் போல்வன என விரித்துரைக்க. மறைத்தியாத்தல் - மறைத்தல். "புனைவனை நீங்கிற் புலால் புறத்திடுவது" (4 : 114) என முன்னும் வந்தது.

71-81. தன் பாராட்டும் என் சொற்பயன் கொள்ளான் - தன்னைப் பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளானாய், பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள், பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன்போல நோக்குகின்றனள், மதுக்கமழ் அலங்கள் மன்னவன் மகற்கு - தேன் மணக்கும் மாலையினையுடைய அரசன மகனுக்கு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர் போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள் என - இவன் இவட்குக் காதலனனாமையின் இவள் இவ்விடத்திலேயே தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின் உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் - புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன், காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி பொருந்திய வாட்படையின் யுடைய காஞ்சனன் என்னும் விஞ்சையன் ;

பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ் ; உதடு. இகல் எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில் : இருபெயரொட்டு. விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித் தடங்கினன் என்க.

82-93. ஆங்கவள் உடைத்த அரசினங்குமரனும் - மணிமேகலை கூறியதைக் கேட்ட மன்னவன் சிறுவனும், களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் - களையாத விருப்பத்தைக் கைவிடானாய்,. வளைசேர் செங்கை மணிமேகலையே-வளைகள் பொருந்திய சிவந்த கைகளையுடைய மணிமேகலையே; காயசண்டிகையாய்க் கடிஞை ஏந்தி - காயசண்டிகையாய்ப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, மாய விஞ்சையின் மன மயக்குறுத்தனள் - மாய வித்தையினாலே உள்ளத்தை மயக்குமுறச் செய்தனள், அம்பல மருங்கில் அயர்ந்து