பக்கம் எண் :

பக்கம் எண் :286

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

45





50





55





60





65





70





75


ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத

தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும்
காயங் கரையெனும் பேரியாற் றடைகரை
மாயமின் மாதவன் வருபொரு ளுரைத்து
மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம்
பிரம தருமனைப் பேணினி ராகி

அடிசிற் சிறப்பியா மடிகளுக் காக்குதல்
விடியல் வேலை வேண்டின் மென்றலும்
மாலை நீங்க மணமகிழ் வெய்திக்
காலை தோன்ற வேலையின் வரூஉம்
நடைத்திறத் திழுக்கி நல்லடி தளர்ந்து

மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச்
சீல நீங்காச் செய்தவத் தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளுந் தலையுங் துணிந்துவே றாக
வாளிற் றப்பிய வல்வினை யன்றே

விராமலர்க் கூந்தன் மெல்லியல் நின்னோ
டிராகுலன் தன்னை யிட்டக லாதது
தலைவன் காக்குந் தம்பொருட் டாகிய
அவல வெவ்வினை யென்போ ரறியார்
அறஞ்செய் காத லன்பினி னாயினும்

மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழிய
தாங்கவ் வினைவக் தணுகுங் காலைத்
தீங்குறு முயிரே செய்வினை மருங்கின்l
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை

ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது
இன்னுங் கேளா யிளங்கொடி நல்லாய்
மன்னவன் மகற்கு வருந்துதுய ரெய்தி
மாதவ ருணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய் தாங்கிடும்

இடுசிறை நீக்கி யிராசமா தேவி
கூட வைக்குங் கொட்பின ளாகி
மாதவி மாதவன் மலரடி வணங்கித்