பக்கம் எண் :

பக்கம் எண் :287

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை


80





85





90





95





100





105





110


தீது கூற அவள் தன்னொடுஞ் சேர்ந்து
மாதவ னுரைத்த வாய்மொழி கேட்டுக

காதலி நின்னையுங் காவல் நீக்குவள்
அரசாள் செல்வத் தாபுத் திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனா லவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத் தவனொடு மெழுந்து

மாயமில் செய்தி மணிபல் லவமெனும்
தீவகத் தின்னுஞ் சேறலு முண்டால்
தீவ திலகையின் தன்திறங் கேட்டுச்
சாவக மன்னன் தன்னா டடைந்தபின்
ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப்

பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை
ஆங்கந் நகரத் தறிபொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எங்கோன் எவ்வுயி ரனைத்தும்
முறைமையிற் படைத்த முதல்வனென போர்களும்

தன்னுரு வில்லோன் பிறவுருப் படைப்போன்
அன்னோன் இறைவ னாகுமென் போர்களும்
துன்ப நோன்பித் தொடர்ப்பா டறுத்தாங்
கின்ப வுலகுச்சி யிருத்துமென் போர்களும்
பூத விகாரப் புணர்ப்பென் போர்களும்

பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம்
அல்லியங் கோதை கேட்குறு மந்நாள்
இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார்
அறனோ டென்னையென றறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த

நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்
கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை
ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக்
காம்பன தோளி கனாமயக் குற்றனை

என்றவ னுரைக்கும் இளங்கோடி நல்லாய்
அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை