115
120
125
130
135
140
145
|
தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும்
வாயே யென்று மயக்கொழி மடவாய்
வழுவறு மரணும் மண்ணுங் கல்லும்
எழுதிய பாவையும் பேசா வென்ப
தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியா யாயின் ஆங்காது கேளாய்
முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி
யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து
மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும்
கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க
ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும்
என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய்
மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன்
துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின்
மயனெனக் கொப்ப வகுத்த பாவையின்
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்
மாந்த ரறிவது வானவ ரறியார்
ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன்
ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ
அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம்
உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப்
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின்
மணிமே கலையான் வருபொரு ளெல்லாம்
துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத்
தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறுகடை போக எனக்கரு ளென்றலும்
துவதிக னுரைக்குஞ் சொல்லலுஞ் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக்கொடி நல்லாய்
|